கல்லூரி நினைவுகள்

           

              கல்லூரி நினைவுகள்

எங்கிருந்தோ வந்தோம்
இங்கு சந்தித்து கொண்டோம்

சாதி மதம் பேதமில்லாமல்
பழகி வந்தோம்

பள்ளம் மேடு பார்க்காமல்
பாய்ந்தோடும் அருவியாய்
துள்ளி திரிந்தோம்

மனதில் உள்ள துன்பங்கள் மறந்து
உயரம் செல்லும் குருவியாய்
சிறகடித்து பறந்தோம்

ஒருவர் சாப்பாட்டில் ஒன்பது பேர்
பசியாற்றினோம்

தண்டனை வாங்கி வெளியே நின்றாலும்
தனித்துவமாய் உணர்ந்தோம்

அழுவது கூட ஆனந்தமாக தான் இருந்தது- அன்று
ஆறுதல் கூற நண்பர்கள் இருந்ததால் ......
விழுவது கூட சுகம் தான் தூக்கி
நிறுத்த தோழன் இருந்ததால் ......

பள்ளியில் எத்தனை நாட்கள் விடுமுறை என்று
ஆனந்தப்பட்டதை விட
கல்லூரில் இத்தனை நாட்களா விடுமுறை என்று
வருத்தப்பட்ட நாட்கள் தான் அதிகம்


என்னும் எத்தனையோ
நினைவுகள் .........

நாம் சிரித்த சிரிப்புகள்
அழுத சோகங்கள்
கொண்டாடிய விழாக்கள்
அத்தனையும் தனக்குள் பத்திரபடுத்தி வைத்து
ஆடோக்ராப்பாய் அசை போடுகிறது
நம் வகுப்பறைகள் ...

நாம் அடித்த அரட்டைகளையும் இட்ட அடையாளங்களையும் சுமந்து
அனாதையாய் நிற்கின்றன
நாம் அமர்ந்த மேஜைகள் ........

விட்டு சென்ற நினைவுகள் எல்லாம்
இதயத்தில் இதமாய் இனிக்க
இனி நாம் என்று இணையபோகிறோம்?

கடற்கரையில் எழுதப்பட்ட
பெயர்களாய் நம் உணர்வெல்லாம்
உயிறற்று போனேதே !

தேனீகள் பல உள்ள தேன் கூட்டை கல்லெறிந்து
கலைத்தாற்போல்
நம் கல்லுரி கூட்டை கலைக்க
யார் எரிந்தர்களோ இந்த பிரிவெனும் ஈட்டியை....

எறிந்த ஈட்டியினால் எங்கள் இதயத்தில் ஏற்பட்ட
காயம் காலப்போக்கில் ஆறிவிடும் என எண்ணினேன்....

காலம் போகப்போக தான் தெரிந்தது
அது காலபோக்கில் மாறிவிடும் காயங்கள் அல்ல
காலம் போகப்போக இனிக்கும் நினைவுகள் என்று !

நிஜங்களை எல்லாம் தொலைத்துவிட்டு
நினைவுகளை மட்டும் சேகரிக்கிறேன்,
என் நினைவு பெட்டகத்தில் ,
ஆட்டோகிராபாய் ......

Comments

Popular Posts